தேவதையைக் கண்டேன்
July 23, 2013
கருங்கூந்தல் காற்றிலாட,
கார்மேகம் தோற்றுப்போக,
கன்னத்தின் வண்ணத்தில்
வெண்ணிலவும் தலைகுனிய,
செம்மையான உதட்டுச்சாயம்
சூரியனும் தோன்றிடாதே,
வானவில்லை உடுத்திவருவாள்,
தோகையெங்கே வண்ணமயிலே?
கைவளையல் தாலாட்டால்
கூவமறக்கும் கொண்டைச்சேவல்,
கொலுசுச்சத்தம் கேட்டாலே,
நடுநிசிப்பேயும் நடுங்கிச்சாகும்,
தேவதையைப் பார்த்ததில்லை
இப்படித்தான் இருப்பாளோ?